Skip to main content

“குளம், வீடு, கழிவறைகள் காணவில்லை”,சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு! 

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த 100 நபர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால்  இதுநாள் வரை சம்பளம் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 

cuddalore

 

 

இதனால் அப்பகுதியில் சம்பளம் பெறாத பொதுமக்கள் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில்  நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த தங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து , பயனாளிகளை நீக்கி யுகோ வங்கியில் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
 

மேலும் தானே புயல் திட்டத்திலும், அரசு நிதியிலும்  கட்டப்பட்ட வீடுகள் , கழிவறைகள் காணவில்லை என்றும்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வெட்டியதாக கூறப்படும் குளங்களை காணவில்லை என்றும்,  இதுபோல் 2012 முதல் 2017 வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அவற்றின் மீது உரிய விசாரனை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்