தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியைத் தொடர்ந்து சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, இன்றும், நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1,200 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை, நாகை, சேலம், தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. பேருந்து நிலையம் முழுவதும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல் 17- ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.