Skip to main content

கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!

Published on 24/01/2018 | Edited on 24/01/2018
கட்டண உயர்வு -  அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!

தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் பேருந்து கட்டணம் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இப்படி மாற்றியமைக்கப்பட்ட கட்டண உயர்வானது தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அரசு தெரிவித்தது.

இதையடுத்து, கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தன் டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்