Skip to main content

பத்திரப் பதிவுத்துறையில் ஊழல்; அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..! 

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

High Court orders Tamil Nadu government to file report ..!


பத்திரப் பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். 

 

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி, பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்