Skip to main content

ஜெகத்ரட்சகன் மீதான மோசடி வழக்கில் அவரது மகன் ஆஜாராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

High Court orders his son Appear in case against Jagathratsakan!

 

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க எம்.பி யுமான ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பாக, அவரது மகன் சந்தீப் ஆனந்த், சி.பி.சி.ஐ.டி போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் புகார் அளித்தார். இது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் யாருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

 

High Court orders his son Appear in case against Jagathratsakan!

 

ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜராகி, இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் மணிசங்கர், ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஜெகத்ரட்சகன் நேற்றைய தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இருப்பினும், அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் காரணமாகவே, விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

 

Ad

 

இதனைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்த விசாரணைக்கு, ஜெகத்ரட்சகன் சார்பாக, அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைக்கலாம். 1965-ல் ஃபோர்ஜரி நடந்ததாகக் கூறப்பட்டு FIR தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 1995-ஆம் வருடம் பங்குகளை வாங்கிய ஜெகத்ரட்சகன் மீது எவ்வாறு குற்றச்சாட்டு கூற இயலும்? புகார் கொடுத்த தாசன் சிவில் நீதிமன்றத்தை நாடாமல் குற்ற வழக்கு தொடுத்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பியதோடு,1995-ஆம் வருடத்திற்குப் பின் உண்டான கைவசம் உள்ள ஆவணங்களை ஒப்படைக்குமாறும், ஆவணங்களை ஒப்படைக்கக் கோரியும் கட்டாயப்படுத்த போலீசாருக்கு அதிகாரமில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், ஜெகத்ரட்சகன் வழக்கு குறித்து சி.பி.சி.ஐ. டி போலீசார் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்