விசாரணைக் கைதிகளை மரணமடையும் வரை கொடூரமாகத் தாக்குவது காவல் துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக 2013 ஆம் தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வரர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'எந்த காரணத்திற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அதற்கு எதிராக அரசின் சட்டம் உள்ளது. விசாரணைக் கைதிகளின் மரணம் காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி குழு அமைத்தால் அரசின் நல்ல நிர்வாகத்தை காட்டுவதாக அமையும்' என்ற நீதிபதிகள் 'மாநில அரசே முடிவு எடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும்' என நம்புவதாகக் கருத்து தெரிவித்தனர்.