டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும்.
டெல்டா மாவட்டம், கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 9 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரம், மண்டபத்தில் தலா 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணை, நாங்குநேரி, கேளம்பாக்கம், மணிமுத்தாறு, திருப்போரூரில் தலா 7 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.