சென்னையில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று (26/11/2021) 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (26/11/2021) கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை (27/11/2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை தொடரும்.
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.