தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே1 ஆம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும், மே ஒன்றாம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கரூர், திருப்பூர், திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மே ஒன்றாம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை-அதிராம்பட்டினம், புதுக்கோட்டை-வம்புன், குமரி-பெருஞ்சாணி, புத்தன் அணையில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.