தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும் என்றும், வரும் 25 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் நெல்லை சங்கராயன்கோவில், மானாமதுரையில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், சோளிங்கரில் 8 சென்டி மீட்டர் மழையும், ஆர்.கே.பேட்டை, கடவனூர், மஞ்சாறு பகுதியில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.