Skip to main content

ஷாக் கொடுக்கும் தக்காளி விலை - கிலோ ரூ. 150க்கு மேல் விற்பனை!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

fg

 

அத்தியாவசிய காய்கறிகளுள் ஒன்றான தக்காளியின் விலை 150ஐ கடந்து  விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

 

இந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பதி, விமான நிலையம், ரயில்நிலையம் என எங்கு திரும்பினாலும் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வாகன போக்குவரத்து தடை மற்றும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. 

 

குறிப்பாக, ஆந்திராவிலிருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தமிழ்நாட்டுக்கு வருவது தடைப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை 150ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலையைக் கேட்டு பலர் தக்காளி வாங்காமல் இல்லம் திரும்பிவிடுகிறார்கள். அரசாங்கம் இந்த மழைக்காலத்தில் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை சரி செய்து விலையேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்