Skip to main content

மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அதிரடி உத்தரவு

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

health secretary write letter to district collector doctor timing

 

அரசு மருத்துவர்கள், குறித்த நேரத்திற்கு பணிக்கு வருவது குறித்து ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

 

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். “அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும். அரசு மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள், சுகாதாரப் பணியாளர்கள் புறநோயாளிகளுக்கான நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருப்பது அவசியமாகும். மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணியில் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்