தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாக கூறிய அவர், தாம் எந்த தவறும் செய்யவில்லை, தலைமறைவாகவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் காந்தி லலித் குமார் தமக்கு பழக்கமானார். தம்மை திருமணம் செய்துக் கொள்ளும்படி காந்தி லலித் கூறியதாக பேட்டியளித்தார்.
இரண்டு நாட்களாக என்னைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் எதுவும் உண்மையில்லை. நான் கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காந்தி லலித்குமார் என்பவருடன் எனக்கு நட்பு கிடைத்தது. அவரால் சின்ன சின்ன உதவிகள் கிடைத்திருக்கிறது.
குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது. பள்ளிக்கு கொண்டு விடுவது போன்ற உதவிகள் கிடைத்திருக்கிறது. இப்படிப் பழகிக்கொண்டிருக்கும்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று என்னிடம் கேட்டார். எனது கணவர் என்னை கைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். நான் எனது குழந்தைகளுக்காக வாழ்ந்துகொண்டிருப்பதால் இரண்டாவது திருமணம் பற்றி நினைக்கவில்லை. குழந்தைகளுடன் இன்று வரை நான் மிடில் கிளாஸ் வாழ்க்கைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
என் குழந்தைகளின் நலனை கருதி நான் இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்தேன். போக போக சின்ன சின்ன உதவிகள் செய்து அவர் ரொம்ப நல்லவர் மாதிரி நடந்துகொண்டார்.
எனக்கு தேவையில்லாத அழைப்புகள் வந்தது. அப்போது ஒரு பாதுகாப்புக்காவது இரண்டாவது திருமணம் பண்ணிக்க வேண்டும் என்று தோன்றியது. காந்தி லலித்குமாருடன் பழகியது உண்மை. கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று நினைத்தது உண்மை. அதனை நான் மறுக்கவில்லை.
ஒரு ஷாட் பிலிம் எடுத்தோம். அதற்காக இரண்டு, மூன்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். அதனை எனது அனுமதி இல்லாமல், எனது பேஸ்புக் ஐடியை திருடி காந்தி லலித்குமார் என்னுடைய பேஸ்புக்கில் நான் போஸ்ட் பண்ணியிருந்த மாதிரி அவர் பண்ணியிருந்தார். ஐ லவ் யூ என்று நான் போட்ட மாதிரி அந்த ஆள் போட்டார். இதுதான் எங்களுக்குள் வந்த முதல் பிரச்சனை. இது நான் பண்ண தப்பு கிடையாது.
காந்தி லலித்குமாருக்கு நான்தான் மனைவி என்பதுபோல் அந்த ஆள் கிரியேட் பண்ணினார். இவர் எனது மனைவி, இவர் எனது மனைவி என எல்லோரிடமும் காண்பித்தார். பெயர் கெட்டுப்போற மாதிரி ஆகிவிட்டதால் இவரையே கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டேன்.
அதன் பிறகு அவன் செல்போனை பார்த்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கொள்வதாக கூறி காசு பிடிக்கியிருக்கிறான். நிறைய பெண்கள் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறான். இது தெரிந்தவுடனேயே இந்த மாதிரி ஒரு ஆளை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று முடிவு செய்தேன். என் வீட்டுக்கே வரக்கூடாது என்று விரட்டினேன்.
திரும்பி திரும்பி என்னை டார்ச்சர் செய்தான். போட்டோக்களை வெளியில் விடுவேன் என்று மிரட்டினான். டார்ச்சர் தாங்காமல் வீட்டை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு சென்றேன். அங்கேயும் என்னை விடவில்லை. அங்கு வீட்டுக்குள் நுழைந்து எனக்கு தாலி கட்ட முயற்சி செய்தான்.
இதனை நான் காந்தி லலித்குமார் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன். அவருடைய தம்பியிடம் சொன்னேன். அப்போது அவர்கள், அவனை நம்பாதீங்க. அவன் நல்லவன் இல்லை. எங்க அம்மா செத்ததுக்கு அவன்தான் காரணம் என்று சொன்னார்கள்.
அதிலிருந்து நான் அவரினம் இருந்து விலகி இருந்தேன். மீண்டும் என் வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கினான். அதில் அடிப்பட்டு 10 நாள் கேஎம்சி மருத்துவமனையில் இருந்தேன். 2016ல் போலீசில் புகார் கொடுத்து மதுரவாயல் போலீஸ் ஸ்டேசனில் விசாரித்தார்கள். அப்போதே இருவரையும் கூப்பிட்டு பேசி இருவருக்கும் தொடர்பு கிடையாது, அந்த லேடியை பாலோப் பண்ணாதீங்க என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்.
திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் செய்தது அவன்தான். கடந்த இரண்டு மாசமா நரக வேதனையை அனுபவிக்கிறேன். கையை கிழித்துக்கொண்டு நான் தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கிறேன். அவன் ஒரு சைக்கோ. நான் ஒத்துக்கொள்ளவில்லை என்பதற்காக என் குழந்தைகளை அடித்திருக்கிறான். இவ்வாறு கூறினார்.