Skip to main content

ஹெச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

H. Raja appears in court!

 

கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் அருகே, விநாயகர் சதுர்த்தி விழா மேடை அமைத்து பேசுவது மற்றும் விழாவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சம்பவத்தில், அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தைத் தரக்குறைவான வார்த்தையால் ஹெச். ராஜா விமர்சித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இது தொடர்பான வழக்கில் புதுக்கோட்டை திருமயம் நீதிமன்றம், ஹெச். ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தைத் தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹெச். ராஜா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில், கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று (23.07.2021)  ஹெச். ராஜா திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்