Published on 26/08/2022 | Edited on 26/08/2022
மோப்பநாய்களுக்கு பயிற்சிக்காக வைக்கப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்திய காவலர்கள் பணியிடை நீக்கம்
காவல் துறையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க அதற்கு சம்பந்தம் உடைய பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் மோப்ப நாயின் பயிற்சிக்காக வைக்கப்பட்டு இருந்த போதை பொருட்களை புகைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் ஆயுதப்படை வளாகத்தில் மோப்பநாய் பிரிவு செயல்படுகிறது. அங்கு மோப்பநாய்களுக்கு குற்றங்களை கண்டுபிடிக்க காவலர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மோப்பநாய்களுக்கு பயிற்சி கொடுக்க காவல் துறையினரால் கொடுக்கப்பட்ட மயக்கப் பொருட்களை மோப்பநாய் பயிற்சிப்பிரிவில் பணிபுரிந்த மூன்று காவலர்கள் பயன்படுத்தியதால் மூன்று காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.