Skip to main content

மளிகை மற்றும் காய்கறி பொருட்களின் விலையை குறைத்து வழங்க வேண்டும்! ஐ. பெரியசாமி வலியுறுத்தல்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், அந்தந்த பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அதைத்தொடர்ந்துதான் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் இருக்கும் செம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி தனது தொகுதி மக்களுக்காக பத்து லட்ச ரூபாய் மதிப்பில் கரோனா தடுப்பு மருந்துகளான சோப், கிரிமி நாசினி, முககவசம் உள்பட பொருட்களை, துப்புரவு பணியாளர்களுக்கும் அப்பகுதிகளில் உள்ள 22 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் வழங்கி, அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் இந்த கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களான முககவசம், கிருமிநாசினி, சோப்புகளை வழங்கவேண்டும் என்று கூறி அனைவருக்கும் வழங்கினார்.

அதன்பின் பத்திரிகையாளரிடம் பேசிய ஐ. பெரியசாமி, கரோனா வைரஸ் மூலம் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக தலைவர் பொதுமக்களுக்கு மருத்துவ  உபகரணங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இப்பகுதியிலுள்ள ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் இந்த கரோனாவை தடுக்கும் மருத்துவ பொருட்களை அப்பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கி பாதுகாக்கவேண்டும்.

 

I. Periyasamy


 

அதுபோல் துப்புரவு பணியாளர்கள் இரவு - பகல் பாராமல் உழைக்கிறார்கள். இவர்கள் சுகாதார பணியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதுபோல், அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி நிர்வாகிகளும், போலீசாரும் தடுப்பு பணியில் மிக சிறப்பாக பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. 

அதுபோல் நீங்களும் எந்தவொரு தொய்வும் இல்லாமல் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து இந்த மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்.
 

nakkheeran app


 

இந்தப் பணியை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உபகரங்களை கொடுத்து அணிய வலியுறுத்த வேண்டும். ஒரு காலத்தில் கூலி வேலைக்கு போயிட்டு வந்த மக்கள் கையைக்கூட கழுவாமல் சாப்பிட்டது உண்டு. நான் கூட ஒரு காலத்தில் தோட்ட வேலை செய்து விட்டு கை கழுவாமல் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் தற்போதைய சூழல் இதை எல்லாம் மாற்றும் அளவுக்கு உள்ளது. மக்களிடம் இந்த கிரிமிநாசினி மூலம் கைகழுவ சொல்லி அதன்பின் சாப்பிடுமாறு வலியுறுத்தி, மக்களை தொடர்ந்து காப்பாற்ற  வேண்டும் என்றவரிடம், அரசு மூலம் மக்களுக்கு கொடுக்கப்படும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை  அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு... 

இந்த நேரத்தில் அரசு வெளி மார்க்கெட் விலையைவிட  பொதுமக்களுக்கு மிகக் குறைவாக கொடுத்தால்தான் மக்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். அதை விட்டுவிட்டு மளிகைப் பொருட்களையும், காய்கறிகளையும் கூடுதல் விலைக்கு கொடுப்பது வருத்தமாக இருக்கிறது. அதை குறைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்