விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு!
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயம் சார்ந்திராத செய்திகளை பேசுவதாகக்கூறி தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஒவ்வொரு மாதமும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதந்திர கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தாமதமாக துவங்கியது. இந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு விவசாய அமைப்பு நிர்வாகிகள், மற்றும் சங்கம் சாராத விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் விவசாய கூட்டத்தில் விளை நிலங்களுக்கு எதிராக அடுக்குமாடி குடியிருப்பினர் போட்டிருந்த வேலியை அகற்ற மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி சொல்ல விவசாய அமைப்பினர் எழுந்தபோது, குடியிருப்பில் வசிப்பவர்கள் சப்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து விவசாய அமைப்பினர்களுக்காக நடத்தும் கூட்டத்தில் தனிநபர்கள் வரக்கூடாது என்று சப்தமிட்டனர். அரசு அதிகாரிகள் விவ்சாய கூட்டத்தில் தனிநபரை அனுமதித்ததால் விவசாயிகளுக்கிடையே பிரச்சனை உருவானது. அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளிடையே மோதல் ஏற்படக்காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் வந்தால்தான் அனைத்து விவசாயிகளின் குறைகளை கேட்க முடியும். தொலைவில் இருந்து வரும் விவசாயிகளின் குறைகளை கேட்க முடியாமல் போவதாகவும், அரசு அதிகாரிகளிடம் வழங்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் அரசு மெத்தனமாகசெயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்.