Published on 23/09/2021 | Edited on 23/09/2021

டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (23/09/2021) மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் பேசியதாகத் தகவல் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் தமிழ்நாடு ஆளுநர் சந்திக்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.