தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டப் பிறகு முதன்முறையாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் பற்றியும், அதன் சாதனைகள் பற்றியும் ஆளுநருக்கு விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் செயல்படுவதைப் பாராட்டினார். தமிழ்நாட்டில் உயர்கல்வி விரிவடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் தரமான ஆராய்ச்சி மற்றும் தேர்ச்சி விகிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென துணைவேந்தர்களை அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல், நிதிபற்றாக்குறையில் தத்தளித்தப் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கியதற்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், அரசு உயரதிகாரிகள், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.