Skip to main content

பனைவிதை விதைப்பு பணியில் அரசு பள்ளி மாணவர்கள்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
பனைவிதை விதைப்பு பணியில் அரசு பள்ளி மாணவர்கள்



சிதம்பரம் அருகே உள்ள கொடிபள்ளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் கிராமப்புற மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில் கான்சாகிப் வாய்காலின் மேற்கரையில் நக்ரவந்தன்குடி முதல் பெரிய மதகு (மேலச்சாவடி) வரை 5கிமீ தூரம் 2 ஆயிரம் பனைவிதைகளை விதைக்க முடிவு செய்தனர்.

இதனைதொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பனைவிதை போடும் திட்டம் கான்சாகிப் வாய்காலில் தொடங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் முதற்கட்டமாக நக்ரவந்தன்குடி முதல் கொடிபள்ளம் வரை ஆயிரம் பனைவிதைகள் போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர்கள் 3 மீட்டருக்கு ஒரு விதை என்ற கணக்கில் விதைகளை விதைத்தனர். இதில் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் மனோகரன் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவி செய்தனர்.

இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு காலண்டு தேர்வு முடிந்த பின்னர் மீதியுள்ள ஆயிரம் விதைகளை போடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.   

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்