Skip to main content

ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற எண்ணத்திலேயே அரசு அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

Published on 07/08/2017 | Edited on 07/08/2017
ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற எண்ணத்திலேயே அரசு அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற எண்ணத்திலேயே அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காஞ்சிபுரம் அருகே நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், திமுக மற்றும் பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக சில அரசு அதிகாரிகள் செயலாற்றி வருகின்றனர். ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற எண்ணத்திலேயே அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அரசின் செயல்பாடுகளுக்கு அரசு அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அரசு அதிகாரிகளை ஒருமுகப்படுத்தவே எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்