Skip to main content

விவசாயிகளின் வறட்சி நிதி மோசடி அரசு ஊழியர்கள் கைது!

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
விவசாயிகளின் வறட்சி நிதி மோசடி அரசு ஊழியர்கள் கைது!
     
திண்டுக்கல்  மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்த நிதி வருவாய் துறையினர் பரிந்துரை பேரில் கருவூல அலுவலகம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதில் விவசாயிகளின் வங்கி கணக்கு தவறாக இருந்தால் அந்த நிதி கருவூலத்திற்கு திரும்பி விடும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1 1/2 கோடி வரை விவசாயிகளின் பணத்தை மோசடி செய்துள்ளனர். திண்டுக்கல்லில் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சார்நிலை கருவூலத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த அருண்குமாரும் கூடுதல் சார்பு அலுவலருமான விஜயகுமாரும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் திரும்பிய பணத்தை தங்களுக்கு வேண்டிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்  11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைத்து 1 கோடியே 50லட்சம் மோசடி  செய்துள்ளனர்.

இதை கருவூலத்துறைக்கு புதிதாக பொறுப்பு அதிகாரியான வெங்கடேஷ் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி.சந்திரனிடம் புகார் அளிக்க பட்டதின் பேரில் அருண்குமார், அவரது மனைவி கனிமொழி ஆகியோர் கைது செய்யபட்டனர். கூடுதல் சார்பு அலுவலரான விஜயகுமார் தற்காலிக பணி நீக்கம் செய்யபட்டுள்ளனர்.       
             
- சக்தி

சார்ந்த செய்திகள்