Skip to main content

கட்டுகட்டாக எரிக்கப்பட்ட அரசு ஆவணங்கள் – அரசியல் காரணமா ?

Published on 21/07/2018 | Edited on 27/08/2018
bus

 

கரூர் அருகே அரசு போக்குவரத்துப் பணிமனை மற்றும் கும்பகோணம் கோட்டங்களின் ஆவணங்கள் கட்டு கட்டாக எரிக்கப்பட்டுள்ளது.

 

ரைடுக்கு பயந்து பிரச்சனைக்குரிய முக்கிய ஆவணங்கள் காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. காட்டுப் பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் கட்டு கட்டாக ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம் மணவாசி அடுத்துள்ள கோரக்குத்து என்ற குக்கிராமத்தின் காட்டுப் பகுதியில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் ஆவணங்கள் மூன்று இடங்களில் தனித்தனியாக போட்டு எரித்துள்ளனர். பல ஆவணங்கள், நோட்டுகள் முழுமையாக எரிந்த நிலையிலும் சில ஆவணங்கள் பாதி எரிந்த நிலையிலும் உள்ளது.

 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை மற்றும் துறை சார்ந்த ரைடு நடந்து வரும் பரபரப்பான இந்த சூழ்நிலையில், ரைடுக்கு பயந்து போக்குவரத்து துறைக்கு சொந்தமான பிரச்சனைக்குரிய முக்கியமான ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். 

 

மேலும், எரிக்கப்பட்ட ஆவணங்களின் பேப்பர்களை எடைக்கு போட்டிருந்தால் கூட ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்திருக்கும். அப்படி இருக்கும் போது போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான ஆவணங்கள் கட்டு கட்டாக எரிக்க காரணம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  எனவே, மத்திய மாநில அரசுகள் எரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சில நாட்களுக்கு முன்பு தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி – கரூர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் நடைபெறும் ஊழல்களை அம்பலபடுத்துவார் என்று பேட்டிக்கொடுத்த சில நாட்களிலே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அனைவருக்கும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்