அரசு பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!
மதுரை மாவட்டம், அவளியாபுரம் ரிங் ரோடு எண் 4ல் அரசு பேருந்தும் லாரியும் அதிகாலை 6 மணிக்கு மோதியது. இதில் பெரியார் நிலையத்திலிருந்து பெரியார் நகர செல்லும் அரசு பேருந்தை உசிலம்பட்டியை சேர்ந்த ரவிக்குமார் ஓட்டி வந்தார். வில்லாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது48) நடத்துனராக வந்தார்.
பேருந்து அவனியாபுரம் ரிங்ரோட்டில் ஏறும் போது மண்டேலா நகரிலிருந்தது திருச்சி செல்லும் லாரியை திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வம் ஒட்டி வந்தார். அப்போது பேருந்து மீது மோதியதில் அரசு பேருந்து முன் பக்கம் முற்றிலும் சேதமடைந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கண்டக்டர் இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்தில் லாரி நிலை தடுமாறி அருகில் இருந்த கால்வாயில் கவந்தது. இதில் டிரைவர் செல்வத்திற்க்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.