Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு ஒத்திவைப்பு; நாளை விசாரணை

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 


கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரணையை நாளைக்கு (மார்ச் 1) ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டுள்ளார்.

 

go


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 23.6.2015ம் தேதி தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.


தற்போது இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி இளவழகன் முன்னிலையில் இவ்விசாரணை நடந்து வருகிறது. இதுவரை கோகுல்ராஜின் தாய் சித்ரா, அவருடைய அண்ணன் கலைச்செல்வன், அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதி, வகுப்புத்தோழர் கார்த்திக்ராஜா உள்பட 70க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர்.


நேற்று (பிப். 27) சாட்சிகள் விசாரணை நடப்பதாக இருந்தது. அரசுத்தரப்பு சாட்சிகள் நீதிமன்றம் வராதது, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜிகே வராதது ஆகிய காரணங்களால் சாட்சிகள் விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, விசாரணையை மார்ச் 1ம் (நாளை) தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். 

இதற்கிடையே, இதுவரை அரசுத்தரப்புக்கு ஆஜராகி வந்த வழக்கறிஞர் கருணாநிதி மாற்றப்பட்டு, பவானி பா.மோகன் அரசுத்தரப்பு வழக்கறிஞராக பொறுப்பேற்றார். நேற்று அவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். போதிய எஸ்கார்ட் போலீசார் இல்லாததால், திருச்சி சிறையில் இருந்து யுவராஜ் மற்றும் அருண் ஆகியோர் நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை. 


 

சார்ந்த செய்திகள்