இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “இன்ஃப்ளுயன்சா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் எல்லா இடங்களிலும் அதிகமாக இருக்கிறது. கரோனாவும் அதிகரித்து வருகிறது. எல்லாருமே முகக்கவசம் அணிந்து கொண்டு, கொஞ்சம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நாம் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா முழுதாக போய்விட்டது என்று நினைத்தோம். மறுபடியும் இந்தியா முழுவதும் 500 கேஸ்கள் வந்திருக்கிறது. மீண்டும் ஒரு கரோனா அலை வந்துவிடக் கூடாது. அதற்கு நாம் எல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமோ அவர்களெல்லாம் போட்டுக் கொள்ளுங்கள். எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள். வைரஸ் காய்ச்சல் வந்தது என்றால் வீட்டிலேயே இருந்து ஒரு வாரத்திற்கு பின் சரியான பிறகு வெளியே வாங்க. அதைத்தான் அரசும் சொல்கிறது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் ஆன்லைன் ரம்மி மசோதா தடை செய்வதற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக சொல்கிறார்களே என கேள்வி எழுப்ப, அதற்கு ''அதை அவரிடம் போய் கேளுங்கள். ராஜ்பவனுக்கு போய் கேளுங்கள்'' என்றார்.