Published on 20/01/2019 | Edited on 20/01/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டின் மண்ணின் மைந்தரான தமாகா இரண்டாம் தலைவர் ஞானதேசிகன் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவு மாவட்ட தலைவர் ராமதாஸ், வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வதிலை மயில் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி இனிப்பு வழங்கினர்.
பூஜைகளை நேரலையில் பார்த்த ஞானதேசிகன் கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். திண்டுக்கல் தொகுதி மண்ணின் மைந்தரான ஞானதேசிகனுக்குத்தான். அது அதிமுக திமுக என எந்த கூட்டணி அமைந்தாலும் தலைவர் ஜி.கே.வாசன் பெற்றுதருவார் என மாவட்ட தலைவர் ராமதாஸ் தனது கட்சியின் ஆசையை வெளிப்படுத்தினார். அதோடு ஞானதேசிகன் மகன் விஜய் ஞானதேசிகன் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு தமாகா மத்தியில் இருந்து வருகிறது.