Skip to main content

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில்
பெண் சடலம் மீட்பு!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவறையில் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தாடண்டர் நகரில் வசித்து வந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்த வீடு பத்து நாட்களுக்கும் மேலாக பூட்டிக் கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வீட்டுக் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, கழிவறையின் உள்ளே அழுகிய நிலையில், அந்தப் பெண்ணின் உடல் கிடந்தது.

வீட்டின் கதவுகள் உள்புறமும், வெளியேயும் பூட்டியிருந்த நிலையில் அந்தப் பெண் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்