Skip to main content

வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த ராட்சத முதலை!

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

Giant crocodile enters home garden

சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தில் வசிக்கும் சம்பந்த மூர்த்தி என்பவரை மீட்டு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் கொண்டு புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவரது வீட்டினர் கூச்சல் போட்டனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சிதம்பரம் வன ரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் வனப்பிரிவு அலுவலர் பன்னீர்செல்வம் வனக்காப்பாளர் அன்புமணி வன ஊழியர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பிறகு வனத்துறை ஊழியர்கள் லாவகமாக 13 அடி நீள முதலையை பொதுமக்களின் உதவியுடன் பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் விட்டனர். 

Giant crocodile enters home garden

இந்த முதலை 13 அடி நீளமும் 550 கிலோ எடையும் கொண்டது என்றும் இதுவரை பிடித்த முதலையை விட இதுதான் அதிக நீளம் உடையது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்