Published on 14/11/2018 | Edited on 14/11/2018

கஜா புயல் நாளை கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில் 7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
மேலும் கஜா புயலுக்கு புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.