Published on 17/05/2020 | Edited on 17/05/2020

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவானது இன்று இரவுடன் முடிவடையும் நிலையில், தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்று பொதுமுடக்கம் முடியவிருந்த நிலையில் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வரைமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் இந்த பொது முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.