![The gang sold clay as natural fertilizer; Bustle near Tuticorin](http://image.nakkheeran.in/cdn/farfuture/iwHK4xq-Et5EQduXaaQ6R2akr3QNbPj4tc6-j3YShJk/1661919743/sites/default/files/inline-images/clay-fertiliser.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் ஒரு கும்பல் டிஎபி உரத்திற்கு இணையாக எங்களிடம் இயற்கை கடல் பாசி உரம் இருப்பதாக கூறி 50 கிலோ மூட்டைகளை விவசாயிகளிடம் விற்றுள்ளனர். ரூபாய் 1300 கொடுத்து வாங்கிய விவசாயிகள் பின்னர் பிரித்து பார்த்த போது உள்ளே களிமண் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயிகள் போலீசாரிடம் புகார் அளித்து அவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
டிஎபி, யூரியா உட்பட மானிய விலையில் வழங்கப்படும் அனைத்து உரங்களும் 'ஒரே நாடு ஒரே உரம்' என்ற மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் பாரத் என்ற பெயரில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதியில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.