Published on 12/11/2018 | Edited on 12/11/2018

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கடற்படை, ராணுவம், விமானப்படை,கப்பற்படை,கடலோர காவல்படை,பேரிடர் மீட்பு மேலாண்மை குழு மற்றும் உள்ளாட்சித்துறை ,சுகாதாரத்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் பங்கு பெற்றுள்ளனர். அதேபோல் சென்னை,திருவள்ளூர்,கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களும் பங்குகொண்டுள்ளனர்.