
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60) . இரு மகள்களை திருமணம் செய்து கொடுத்த நிலையில் தன் மனைவியுடன் வசித்துவரும் இவர் முத்துப்பேட்டையில் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

இன்று மதியம் முத்துப்பேட்டை கடைக்கு வேலைக்கு செல்ல தனது பைக்கில் புறப்பட்டவர் 200 மீட்டர் தூரத்தில் கஜா புயலின் தாக்கத்தால் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து தாழ்வாக தொங்கிய மின்கம்பி திருநாவுக்கரசு கழுத்தில் மாட்டி கழுத்து அறுபட்டு கீழே விழுந்தவரை அருகில் உள்ளவர்கள் ஓடிப்போய் பார்த்த போது திருநாவுக்கரசு இறந்திருந்தார். உடனடியாக அவரது உடல் பிரேதப்பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புயலுக்கு சாய்ந்த மின்கம்பங்களில் இப்படி சாலையின் குறுக்கே சென்ற கம்பிகளைக் கூட கிராமங்களில் துண்டிக்காததால் ஒரு உயிரை பறிகொடுத்துவிட்டோம் என்கின்றனர் உறவினர்கள்.