Skip to main content

அதிர்ச்சி ரிப்போர்ட்!!! வேதாரண்யத்தில் மட்டும் 27.50 இலட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன...

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

 

கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதித்திருக்கின்றன. அடிப்படை தேவைகளும், அத்தியாவசிய தேவைகளும் இன்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக வேதாரண்யம் கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில்,  4 இலட்சம் தென்னை, 5,200 ஹெக்டேர் அளவுடைய சவுக்கு, 400 ஏக்கர் தைல மரங்கள், உள்ளிட்ட 27.50 இலட்சம் மரங்களும், 16,500 ஹெக்டேர் அளவிலான நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்