பழம் பெரும் நடிகை பி.வி.ராதா மறைவு -
பழம் பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகை பெங்களூர் விஜயராதா என்ற பி.வி.ராதா (69) இன்று பெங்களூருவில் காலமானார்.
அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது
எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான பி.வி.ராதா இன்று பெங்களூருவில் மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். 1964-ல் நவகோடி நாராயணா என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி குமாரி ராதா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 300க்கும் அதிகமான படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இறுதி நாள் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து சங்கம் செயல்படுகளை ஊக்குவித்து வந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைப்பட துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!