
TNPSC-Gr(II),RRB,SI மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் நுழைவு தேர்வு (CUCET) திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை:
’’சென்னை, அசோக்நகர், அம்பேத்கார் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 11.03.2018 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC-Gr(II),RRB,SI,மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் நுழைவு தேர்வு (CUCET) தேர்விற்கான அறிமுக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் கட்டணமில்லா தேர்வுத்தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது.’ ’என்று தெரிவித்துள்ளார்.