தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை- 5 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தில் மாவட்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் காலை 09.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் அர்ச்சனை, திருவிழாக்கள் குடமுழுக்கு நடத்த அனுமதியில்லை.
காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை விளையாட்டு பயிற்சிக் குழுமங்கள் பார்வையாளர்களின்றிச் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி விளையாட்டு போட்டிகளைப் பார்வையாளர்களின்றி நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் வரும் ஜூன் 28- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.