Skip to main content

வழிப்பறியில் ஈடுபட்ட நால்வர் கைது! 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Four arrested in theft case

 

திருச்சி மாவட்டம், உறையூர் பாளையம் பஜார் வாலாஜா சாலை பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே நேற்று நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் கையில் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பத்மநாபன் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் திருச்சி குமரன் நகரை சேர்ந்த வெற்றிச்செல்வன், சண்முகா நகரை சேர்ந்த ரகுபதி, ரெங்காநகரை சேர்ந்த ஹரிஷ் குமார், உறையூரைச் சேர்ந்த கிருஷ்ண ராஜன் ஆகிய 4 பேரும் வழிப்பறி செய்து உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் உறையூர் அரசு மருத்துவமனை நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்