Skip to main content

அமைச்சர் மகனின் பெயருக்கு முன்னால் தவறான இனிஷியல்! -பதறியடித்துத் திருத்திய செய்தித்துறை!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
factory

 

செய்தித்துறை அமைச்சர் இல்லத் திருமணம் குறித்த செய்திக் குறிப்பிலேயே இனிஷியலைத் தவறாகப் போட்டுவிட்டார்கள் அத்துறையினர். அதன்பிறகு, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு இன்னொரு மெயில் அனுப்பி சமாளித்தனர். 


கடந்த 2-ஆம் தேதி, சென்னை – அண்ணாநகர் அம்மா அரங்கில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மகன் அருண்குமாருக்கும், திவ்யாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுகுறித்து பத்திரிக்கைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக, செய்திக்குறிப்போடு போட்டோ ஒன்றை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு  அனுப்பி வைத்தனர். அதில் கடம்பூர் ராஜு மகன் அருண்குமாரின் பெயருக்கு முன்னால் ‘மு’ என்று இனிஷியல் போட்டிருந்தனர். மெயிலைப் பார்த்த ஒருவர் “அமைச்சர் மகனோட இனிஷியலை தப்பா போட்டிருக்கீங்க?” என்று கூற, இனிஷியலை ‘K’ என்று மாற்றி, திருத்தப்பட்டது என்று குறிப்பிட்டு இன்னொரு மெயிலை அனுப்பி வைத்தனர்.  

 

next


அந்தத் திருமண வரவேற்பு மேடையின் இரு ஓரங்களிலும் சின்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்களை வைத்திருந்தனர். ஜெயலலிதா இருந்தபோது,  எம்.ஜி.ஆருக்கு பெரிய அளவில் கட்சியினர் முக்கியத்துவம் தருவதை விரும்பாத காரணத்தால், நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் முடிந்தமட்டிலும் சின்னதாகவே எம்.ஜி.ஆர். படம் இடம் பெற்றிருக்கும். ஜெயலலிதாவும் அமரராகிவிட, எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஜெ. எடுத்த அதே நிலைப்பாட்டை,  இப்போது அக்கட்சியினர் கையில் எடுத்திருக்கின்றனர். ஜெயலலிதாவே உசத்தி என்ற நிலை மாறி, , சம அளவில் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இப்போது மரியாதை கிடைத்து வருகிறது.     


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

'ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்டிருப்பது பிளவு கிடையாது'-முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு   

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

'There is no split between OPS-EPS'-Former Minister Kadampur Raju

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது. அது எங்களிடம் இருக்கிறது என்ற பொறாமையில் ஓபிஎஸ் பேசுகிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சேவல் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றுவந்தார். 1989ல் முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தபோது இரட்டை இலை சின்னத்தில் அவர் வெற்றி பெறவில்லை. முதன்முதலில் அவர் எம்எல்ஏ ஆனது சேவல் சின்னத்தில் தான். இன்றைக்கு இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் இருக்கிறது. சில பிரச்சனைகள் காரணமாக சிலர் நீக்கப்படுவது இயற்கை. ஜெயலலிதா காலத்திலும் பலர் நீக்கப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் காலத்திலும் பலர் நீக்கப்பட்டுள்ளனர்.

 

நீக்கப்பட்டவர்கள் சில காலம் கழித்து இணைந்து கொள்வார்கள். அவர்களாக இணைந்து கொள்வார்களே தவிர கட்சியில் பிளவு இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்டிருப்பது பிளவு கிடையாது. கருத்துவேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார். ஒட்டுமொத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தான ஒற்றைத் தலைமை வேண்டும் என்றது பொதுக்குழுவில் பிரதிபலிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-ஐ நீக்கி வைத்திருக்கிறோமே தவிர, கட்சியில் பிளவு கிடையாது. ஓபிஎஸ-ஐ வெளியேற்றிய பிறகு இரண்டு போராட்டம் நடத்தி விட்டோம் தமிழகம் அளவில். பொதுக்கூட்டங்கள் நடத்தி விட்டோம்''என்றார்.