Published on 29/11/2019 | Edited on 29/11/2019
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 7 பேர் இந்த வழக்கில் தண்டனை கிடைத்து சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், தங்களது விடுதலை மற்றும் பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பிய நளினி, நவம்பர் 28 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இதுப்பற்றி சிறைத்துறைக்கு முறைப்படி கடிதம் தந்துள்ளார்.
நவம்பர் மாதத்தின் முதல் வாரம் இதே காரணங்களை கூறி நளினி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது நளினியின் கணவர் முருகனும் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அதிகாரிகள் சமாதானம் செய்து உண்ணாவிரதத்தை திரும்ப பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.