வனத்துறையை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கருணாமூர்த்தி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுகளில் கடல்பாசி எடுக்க செல்லும் மீனவ பெண்கள் மற்றும் மீன்கூடு வைத்து மீன்பிடிப்பது, நண்டு வலை போன்றவை பயன்படுத்துவதால் கடல்வளம் பாதிப்படைவதாக கூறி வனத்துறை தடை விதித்தது. இதை கண்டித்து பல்வேறு மீனவகிராமத்தை சேர்ந்த மீனவ அமைப்புகள்,மீனவர்கள் இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாலாஜி.