காவிரி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 88 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து 6,158 கன அடி நீர் திறப்பதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது 50 அடி நீர் நிரம்பி இருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கையானது விடப்பட்டுள்ளது.