நிவர் புயலால், கடந்த வாரம் பொழிந்த கனமழையால், தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஏரி, குளம், குட்டை நிரம்பி வழிந்தன.
அதேபோல், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களின் நீண்ட ஆறான பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுள்ளது. இந்தநிலையில் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றின் நடுவே மணல் திட்டில் தாய்நாய் மற்றும் அதன் ஐந்து குட்டிகளும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
கடந்த ஐந்து நாட்களாக இந்த நாய் குட்டிகள் அந்த வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்து வந்துள்ளது. தாய்நாயின் அழுகுரல் சத்ததை கேட்ட அவ்வழியே வந்த பொதுமக்கள் செங்கல்பட்டு தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். உடன விரைந்துவந்த தீயணைப்புபடை வீரர்கள், பாலாற்றின் நடுவே உள்ள மேம்பாலத்தின் மேல் கயிறுகட்டி பாலாற்று வெள்ளத்தின் நடுவே இறங்கி தாய்நாய் மற்றும் அதன் ஐந்து குட்டிகளையும் மீட்டனர். இதனை நேரில் பார்த்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் தீயணைப்புபடை வீரர்களை வெகுவாக பாராட்டினர்.