Published on 27/03/2025 | Edited on 27/03/2025

சென்னை எக்மோர் ரயில் நிலையத்தின் கட்டிடத்தில் இறுதி பக்கத்தில் இருக்கக்கூடிய ரயில் நிலைய அலுவலகம் மற்றும் டெலி கம்யூனிகேஷன் அறைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 3:30 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருக்கும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். எழும்பூர் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின்சார கேபிளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தீவிபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.