மாநிலங்களவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, வழக்கறிஞர் இளங்கோ, அந்தியூர் ராஜேந்திரன் ஆகியோரை தலைமை அறிவித்துவிட்டது. ஆனால் அதிமுக தரப்பில் வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
அதிமுகவின் மூன்று சீட்டுக்கு பாமக, தேமுதிக, ஜி.கே.வாசன் ஆகியோர் எப்படியும் இந்த முறை ராஜ்யசபா சீட் வாங்கிவிட வேண்டுமென்று பிஜேபி துணையோடு கடுமையாகப் போராடினார்கள். ஆனால் அதிமுக தரப்பு கூட்டணிக் கட்சிக்கு யாருக்கும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
முதல்வர் எடப்பாடி தரப்பிலிருந்து தம்பிதுரை, விஜிலா சத்தியானந்த், தளவாய்சுந்தரம், ஆகிய மூன்று பேரில் பரிந்துரை செய்து ஓபிஎஸ் இடம் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ்ஸோ அந்த கடிதத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார்.
இதற்கிடையில் ஓபிஎஸ் தரப்பில் கே.பி. முனுசாமிக்கு கட்டாயம் சீட்டு வேண்டுமென்று ஓபிஎஸ் தரப்பு கடுமையான நிபந்தனை விதித்தது. அதனால் ஓபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமிக்கு சீட்டு உறுதியானது.
இதற்கிடையில் ரஜினியின் நெருக்கமான நண்பரான ஏ.சி.சண்முகம் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பண வினியோகம் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஏ.சி.சண்முகமும் முயற்சி செய்திருக்கிறார். அதனால் அவருக்கு கட்டாயம் சீட்டு உண்டு என்கிறார்கள்.
ஓபிஎஸ் தரப்பில் முனுசாமிக்கும் பிஜேபி மட்டும் ரஜினி தரப்பில் ஏ.சி.சண்முகத்திற்கும் இரண்டு சீட் ஒதுங்கியது போக எடப்பாடி தரப்பிலிருந்து தம்பிதுரைக்கு சிபாரிசு செய்திருக்கிறார். அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகராக இருந்தவர் கடந்தமுறை தேர்தலில் தோற்றுப்போன தம்பிதுரைக்கு மாநிலங்களவை வாய்ப்புக்கு எடப்பாடி சிபாரிசு செய்திருக்கிறார்.
பெரிய குழப்பத்தில் நீடித்த ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு தற்போது தம்பித்துரை, கே.பி.முனுசாமி, ஏ.சி.சண்முகம் என்கிற அளவில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.