Skip to main content

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை 19 எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஸ்டாலினின் கோரிக்கை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை 19 எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ந்து விடுமுறை என்பதால் இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்