Skip to main content

"போராளி ஹீரோ... ரியல் ஹீரோ... லட்சிய ஹீரோ... " - வைகோ ஆவணப்பட வெளியீட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

"Fighter Hero. Real Hero Ambitious Hero Vaiko" - Chief Minister M.K.Stalin

 

வைகோவின் 56 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாமனிதன் வைகோ என்ற ஆவணப் படத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உரைவீச்சால் அரசியலின் ஆழத்தையும் நெடும் பயணத்தினால் தமிழகத்தினை அளந்தவர் வைகோ" என குறிப்பிட்டார்.

 

மேலும் பேசிய அவர் "திரைப்படத்தில் காட்டக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு காட்டப்படுபவர்கள். ஆனால் சித்தரிக்கப்படாத ஹீரோவாக வைகோ செயல்பட்டார். அவர் ரியல் ஹீரோ லட்சிய ஹீரோ ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அவர் போராளி ஹீரோ. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதும் கூட வைகோ குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணியாக திமுக போட்டியிட்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சிறைக்கு சென்றோம். ஒப்பந்தத்தை படித்து கூட பார்க்கவில்லை.  கலைஞர் சொல்லிவிட்டார். கையெழுத்து போடுகிறேன் என சொன்னார்.

 

"அவர் உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல. கொள்கையில் உயர்ந்தவர் லட்சியத்தில் உயர்ந்தவர். தியாகத்திலும் உயர்ந்தவர் அண்ணன் வைகோ திமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் வைகோவின் பேச்சிற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். 56 ஆண்டு கால அரசியல் வாழ்வை ஒன்றரை மணிநேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது" என பாராட்டி பேசினார்.

 

சார்ந்த செய்திகள்