Skip to main content

கணவருக்கு பாலியல் தொந்தரவு... மகளிர் போலீசில் பெண் அரசு அதிகாரி புகார் 

Published on 20/08/2020 | Edited on 20/08/2020
Perambalur

 

 

பெரம்பலூர் மாவட்ட அரசு சுகாதார பணிகள் துணை இயக்குனராக உள்ளவர் கீதாராணி. இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கீதாராணி கூறியிருப்பது,

 

"எனது கணவர் ரமேஷ், வயது 42. பெரம்பலூரில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். அதில் முப்பது வயதுள்ள ஒரு பெண் வேலை பார்த்து வந்தார். அவரது நடத்தை சரியில்லாததால் ஆறு மாதங்களுக்கு முன்பே அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டோம். ஆனால் அந்த பெண் எனது கணவரின் மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் கொடுத்து வந்தார்.

 

இதுகுறித்து நான்கு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்துள்ளோம். அதனையடுத்து அப்போது போலீசார் அப்பெண்ணை அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகும் அந்தப்பெண் எனது கணவருக்கு மொபைல் போன் மூலம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறார். 

 

அந்த பெண், என் கணவரின் கிளினிக்கிற்கே நேரில் சென்று வம்பு செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த தோடு அந்த பெண் மீது முறையான புகார் அளித்துள்ளேன்" என்று புகாரில் கூறியுள்ளார். இவரது புகார் மீது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்