தனியார் மின் உற்பத்தி நிறுவனம் விருதுநகர் முதல் கோவை வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தின்கீழ் உயர்மின் கோபுரங்கள் அமைத்து அதன் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய தாலுகாவிலுள்ள 40 வருவாய் கோட்டங்களுக்குட்பட்ட நிலக்கோட்டை, விருவீடு, காமலாபுரம், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி உட்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்கு இடையே உயர்மின் கோபுரங்களை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆகவே தமிழக அரசு கேபிள் மூலமாக சாலை ஓரங்களில் மின்சாரங்களை கொண்டு செல்ல வேண்டும். என வலியுறுத்தி இன்று (06.10.20) 40 வருவாய் கோட்டத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.